நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியாகியுள்ளது. அதிலும் முக்கியமாக கார் டிரைவர்களை மதிக்காத இளம் நாயகிகள் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

காரணம் பாவனா தற்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட காரணம் முதலில் இவரிடம் வேலை செய்த டிரைவர் என்று பாவனா போலீசிடம் கூறியுள்ளார்.

மேலும், காருக்குள் இவர்கள் பாவனாவை துன்புறுத்தியதுடன் , அந்தக் காட்சிகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் படம் பிடித்து வைத்துள்ளதாகவும் போலீசிடம், கூறியுள்ளார் பாவனா இந்த செய்தி மேலும் பலருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலிஸார் தற்போது கைது செய்துள்ளதாகவும், அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.