கார்த்திகா மேனன் என்கிற தன்னுடைய பெயரை சினிமாவிற்காக பாவனா என மாற்றிக்கொண்டு, தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி படம் மூலம் அறிமுகம் கொடுத்தவர் நடிகை பாவனா.

இந்த படத்தை தொடர்ந்து பல தமிழ் பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது, இதை தொடர்ந்து அவர் நடித்த ஆர்யா, தீபாவளி, ஜெயம்கொண்டான் போன்ற படங்கள் அவருக்கு பல வாய்ப்புகளை தேடிக்கொடுத்து முன்னணி நாயகி பட்டியலில் இணைத்து. மேலும் அவர் கடைசியாக அஜித்துடன் அசல் படத்தில் நாயகியாக நடித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்த தொடங்கியதால், தமிழ் பட வாய்ப்புகள் அவரது கையை விட்டு விலகிவிட்டது.

இந்நிலையில் நடிகை பாவனா இன்று காலை அடையாளம் தெரியாத சில நபர்களால் சினிமா பாணியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாகியுள்ளார்.

இதுகுறித்து போலீஸில் நடிகை பாவனா புகார் அளித்துள்ளார். அதோடு அந்த கும்பலில் தன்னிடம் இதற்கு முன் வேலை பார்த்த கார் ஓட்டுனர் இருந்ததாக கூறியுள்ளார்.

இதை அறிந்த மலையாள திரையுலக வட்டாரம் அதிர்ச்சியில் உள்ளனராம், அதே போல அவரது நண்பர்கள் பிரபலங்கள் பலர் அவரை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.