கடந்த சில நாட்களுக்கு முன் காரில் கடத்தப்பட்டு, பல்சர் சுனில் என்பவரால் பாலியல் வன்முறைக்கு நடிகை பாவனா ஆளான செய்தி மலையாள திரையுலகம் மற்றும் இன்றி ஒட்டுமொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்நிலையில் பாவனாவை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிய நபர்களை கேரளா போலீசார் தீவிர தேடுதலுக்கு பின் கைது செய்து நேற்றைய தினம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்கள் கைது செய்ய பட்டதால், பாவனா மனஉளைச்சலில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளார், மீண்டும் அவர் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார் என நடிகையும், பாவனாவின் நெருங்கிய தோழியுமான ரம்யா நம்பீசன் கூறினார்.
தற்போது மீண்டும் நடிகர் பிரித்திவிராஜிக்கு ஜோடியாக அவர் நடித்து வரும் ஆடம் படத்தின் படப்பிடிப்பில் வழக்கம் போல் காலத்து கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
