நடிகை பாவனா பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தன்னுடைய காதலர் நவீன் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். 

திருமணத்திற்கு பின் சில நாட்கள் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த இவர் தற்போது சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கியுள்ளார்.

இவர் கன்னடத்தில் நடித்து வரும் 'இன்ஸ்பெக்டர் விக்ரம்' என்ற படத்தில் பிரஜ்வால் தேவராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். 

மேலும் பாவனா மிகவும் துணிச்சலான போதை மருந்து விற்கும் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம். 

இந்த படத்தை தொடர்ந்து பாவனா 'மஞ்சினா ஹனி' என்கிற கன்னட படத்திலும் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.