தமிழில் 'சித்திரம் பேசுதடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பாவனா. பின் 'ஜெயம் கொண்டான்' , ' தீபாவளி' , 'அசல்' உள்ளிட்ட தமிழ் படங்களிலும், மலையாளம், கன்னடம், ஆகிய மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். 

தற்போது பிரபல கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட சில படங்களை நடித்து முடித்த இவர், தற்போது தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 96  படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்று சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

"திரையுலகத்தில் தனக்கு பல தோழிகள் உள்ளனர், குறிப்பாக சம்யுக்தா வர்மா, மஞ்சு வாரியார், ரம்யா நம்பீசன் போன்ற பலர் நெருங்கிய தோழிகளாக தற்போது வரை உள்ளனர். 

பின் தன்னுடைய காதல் கணவர் பற்றி பேசிய பாவனா...

நவீனை கன்னடத்தில் நடித்த 'ரோமியோ' படப்பிடிப்பில் தான் முதலில் பார்த்தேன். அப்போது, எனக்கு கன்னடம் தெரியாது. எனினும் இருவரும் நண்பர்களாக ஆனோம். பின் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.

நவீன் மலையாளி இல்லை என்பதால் முதலில் திருமணத்துக்கு யோசித்த தன்னுடைய குடும்பத்தினர் பிறகு சம்மதம் தெரிவித்தனர். சினிமாவில் அறிமுகமானதும் தொடர்ந்து 2 வருடம் பிசியாக நடித்தாலும், இரண்டாவது நாயகி கதாபாத்திரம் தான் அமைந்தது. இதனால் ஒரு கட்டத்தில் சினிமாவை இருந்தே விலக முடிவு செய்தேன். அதன் பிறகு தான் தமிழில் கதாநாயகி பட வாய்ப்பு கிடைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.