'பேட்ட' படத்தின் ப்ளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து, 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்துவரும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயகத்தில் உருவாகிவரும் இந்தப்படத்தில், 'ஆதித்ய அருணாசலம்' என்ற போலீஸ் கேரக்டரில் ரஜினிகாந்தும், அவருக்கு ஜோடியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாராவும் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகிவரும் 'தர்பார்' படத்துக்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'தர்பார்' படம் ரிலீசாகவுள்ளது.
விரைவில் படத்தின் சிங்கிள் ட்ராக் மற்றும் இசை வெளியீடு தொடர்பான அறிவிப்பு படக்குழுவிடமிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சமீபத்தில் கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விருது விழாவில் மத்திய அரசு சார்பில் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருதும் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், டிசம்பர் 12ம் தேதி சூப்பர் ஸ்டாரின் 70-வது பிறந்தநாள் என்பதால், அதனை கொண்டாட ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகமும் தயாராகி வருகிறது. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ட்ரீட்டாக, அவர் நடித்த சூப்பர் டூப்பர் கிளாசிக் ஹிட்டான 'பாட்ஷா' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யவுள்ளதாக பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யா மூவீஸ் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருதை பெற்றதன் நினைவாகவும் மற்றும் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவும் வரும் டிசம்பர் 11ம் தேதி உலகம் முழுவதும் சில நகரங்களில் 'பாட்ஷா' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த ஆக்ஷன் படங்களிலேயே, சூப்பர் ஸ்டாரின் 'பாட்ஷா' படம்தான் பெஸ்ட் டெம்ப்ளேட்டாக திகழ்கிறது. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து கடந்த 1995-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், மெகா ஹிட்டானது.
ரஜினிகாந்தின் திரைப்பயணத்திலேயே மிக முக்கியமான படமாகவும் அமைந்தது. இன்றைக்கும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கும் 'பாட்ஷா' படம், 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசாவது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 22, 2019, 8:33 PM IST