Asianet News TamilAsianet News Tamil

ஓடிடியில் வெளியாகும் 'சூரரை போற்று'... சூர்யாவின் முடிவிற்கு பாரதி ராஜா வரவேற்பு!

நடிகர் சூர்யாவின் முடிவுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக, இயக்குனர் பாரதி ராஜா.... அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
 

barathiraja support surya soorarai potru movie issue
Author
Chennai, First Published Aug 26, 2020, 2:47 PM IST

விநாயகர் சதுர்த்தி தினம் அன்று, நடிகர் சூர்யா தான் தயாரித்து நடித்திருக்கும் 'சூரரை போற்று' திரைப்படம், ஓடிடி தளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவித்தார். மேலும் இந்த கொரோனா நேரத்தில் ஒரு நடிகராக யோசிக்காமல் தயாரிப்பாளராக சிந்தித்து செயல் படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

சூர்யாவின் இந்த முடிவை சிலர் ஏற்றுக்கொண்ட போதிலும், பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்றைய தினம் கூட, இயக்குனர் ஹரி சூர்யா தன்னுடைய முடிவை மறு பரிலீசாலை செய்யவேண்டும் என தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

barathiraja support surya soorarai potru movie issue

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் முடிவுக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக, இயக்குனர் பாரதி ராஜா.... அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, திரு.சூர்யா மற்றும் பெரிய நடிகர்கள் படங்கள் ஓடிடியில் வரக்கூடாது, திரையில் தான் வெளிவர வேண்டும் என்கின்ற உங்கள் எண்ணம் வரவேற்க கூடிய ஒன்றுதான். அதே நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதை திரையில் கொண்டு வர முன்வருவீர்களா? போராடுவீர்களா? படைப்புகளிலும். தயாரிப்புகளிலும் தொழில் சுதந்திரம் வேண்டும். கட்டுப்படுத்த நினைக்க கூடாது. என் நண்பர் திரு.சிவகுமார் அவர்களின் வளர்ப்பும் வாழ்வியல் முறையையும் பார்த்து கர்வப்பட்டுள்ளேன்.

barathiraja support surya soorarai potru movie issue

திரு சூர்யா, திரு.கார்த்தி இருவரும் என் வீட்டு முற்றத்தில் வளர்ந்தவர்கள் அவர்களின் மனித நேயப்பண்பும் நேர்மையும் ஒழுக்கமும் நான் நன்கு அறிவேன்.இவர்கள் தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷங்கள். இவர்கள் நம் வீட்டுப் பிள்ளைகள் என பெருமைப்படுங்கள். இவர்களை மட்டுமில்லை எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள் மனம் வலிக்கிறது. இனி தனி நபர் தாக்குதல் வேண்டாம். தயாரிப்பாளர்கள் நல்ல நிலையில் இருந்தால் தான், இதை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வு செழிக்கும். தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் வாருங்கள் பேசித்தீர்ப்பூம். ஒற்றுமையுடன் செயல்படுவோம். கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் ரசிகர்கள் சமூக இடைவெளியுடன் திரைப்படத்தை காண ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்கிற நல்லெண்ணத்தில் தான் திரு.சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியதாகும் திரு.ஜிவி.பிரகாஷ்குமார் இசை அமைத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா மிரட்டியுள்ள சூரரை போற்று திரை முன்னோட்டம் பார்த்து வியந்தேன். இந்த படம் தமிழ் திரைப்பட வரலாற்றில் சூரரை போற்று முத்திரைப்பதிக்கும், தமிழை போற்றும் என கூறி தன்னுடைய ஆதரவை சூர்யாவிற்கு தெரிவித்துள்ளார் பாரதி ராஜா.

 

Follow Us:
Download App:
  • android
  • ios