இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த, இயக்குனர் பாரதி ராஜா இப்படத்தில் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

பல படங்களில் காமெடியனாக நடித்து வந்த, சூரி ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார் என்பது நாம் அறிந்தது தான். இதுகுறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான போதிலும், கொரோனா பிரச்சனை தலை தூங்கியதால், படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த, இயக்குனர் பாரதி ராஜா இப்படத்தில் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே குளிர் காலமாக இருப்பதால் இயக்குனர் பாரதி ராஜாவின் உடல் நிலை படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராமல், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்தப் படத்தில் இருந்து பாரதி ராஜா விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.

அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து ,பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி படத்தை இயக்கிய வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து சூர்யாவுடன் வாடி வாசல், தனுஷ் உடன் புதிய கூட்டணி என வெற்றிமாறன் படு பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.