பெங்களூருவை சேர்ந்த அஜித் ரசிகர்கள், துணிவு படத்துக்காக வைத்துள்ள பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு மாலை தயார் செய்ய ரூ.7 லட்சம் செலவு செய்துள்ளனர்.

நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் நாளை ரிலீசாக உள்ளது. இப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 1 மணிக்கே திரையிடப்பட உள்ளதால், அதனை அதகளமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அஜித்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த அஜித் ரசிகர்கள், துணிவு படத்திற்காக பிரம்மாண்ட மாலை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். அந்த மாலையில் விலை ரூ.7 லட்சமாம். திரையரங்கு முன் வைக்கப்பட உள்ள அஜித்தின் பிரம்மாண்ட கட் அவுட்டுக்கு அந்த மாலையை அணிவித்து அழகுபார்க்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Scroll to load tweet…

பெங்களூருவை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இதுபோன்று அஜித்தின் கட் அவுட்டுக்கு பிரம்மாண்ட மாலை அணிவிப்பது இது முதன்முறை அல்ல 11 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று அஜித்தின் கட் அவுட்டுக்கு மாலை அணிவித்ததாகவும், தற்போது அதனை மீண்டும் செய்ய உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Scroll to load tweet…