சினிமா கட்டணம் அதிகளவில் வசூலிப்பதை எதிர்த்து வழக்கு, பதிலளிக்க பைரவா , சிங்கம் 3 படத்தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் நடித்து வெளியாகும் பைரவா, நடிகர் சூரியா நடித்து வெளியாகும் சிங்கம் ஆகிய படத்திற்கு திரையரங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னையில் உள்ள சினிமா திரையரங்குகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தேவராஜ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி டி. ராஜா, தமிழக அரசுக்கும், பைரவா தயாரிப்பாளர், சிங்கம் 3 பட தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
வழக்குதாரர் தேவராஜ் ஏற்கனவே ரஜினி நடித்த கபாலி படத்துக்கும் அதிக கட்டணம் வசூலிப்பதாக வழக்கு தொடர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST