கர்நாடக இசை ஜாம்பவான் பாலமுரளி கிருஷ்ணா நேற்று உடல் நலக்குறைவு காரணமாக உயிர் இழந்தார்.

இவரின் உடலுக்கு பல திரையுலக பிரபலங்கள் நேற்று முதலே அஞ்சலி செலுத்தி வந்தனர். மேலும் இன்று இசைஞானி இளையராஜா, சிவகுமார், சுகாசினி, மற்றும் பல இயக்குனர்கள், நடிகர்கள், மற்றும் இசைக்கலைஞர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் இவரது உடல் சென்னை பெசன்ட் நகர் மின்தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டது.