அவர்களுடன், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பூமிகா சாவ்லா, சாயாஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சிரன்டன் பட் இசையமைக்க, சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ரியலில் 59 வயதான பாலகிருஷ்ணா, ரூலருக்காக யங் லுக்கில் தோன்றுகிறார்.ஏற்கெனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ரூலர்' படம், வரும் டிசம்பர் 20-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 'ரூலர்' படத்தின் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது. விதவிதமான கெட்டப்புகளில் ஆக்ஷன், ரொமான்ஸ், ஆட்டம் என பாலகிருஷ்ணா கலந்துகட்டி அடித்திருக்கும் இந்த டீசர், அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. குறிப்பாக, யங் லுக்கில் ஸ்டைலிஷாக மாஸ்காட்டியிருக்கும் பாலகிருஷ்ணாவை கண்டு ஆச்சரியமடைந்துள்ள ரசிகர்கள், டீசருக்கு லைக்ஸை அள்ளி வீசி வருகின்றனர். 

எதிர்பார்த்த மாதிரியே சமூக வலைதளங்களை அதகளப்படுத்திவரும் 'ரூலர்' டீசர், இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி அசத்தி வருகிறது. அத்துடன், யூ-டியூப்பில் வெளியான 2 மணிநேரத்திலேயே ஒரு மில்லியன் வியூசை கடந்து சாதனை படைத்துள்ளது. 

'ரூலர்' டீசருக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் படக்குழு, அடுத்து படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.