பிக்பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் இரண்டு நாட்களாக விளையாடி வந்த மணிக்கூண்டு டாஸ்க் முடிவுக்கு வந்ததை அடுத்து, 5 அணியாக பிரிக்கப்பட்ட போட்டியாளர்களில் பாலா அணியினர் மட்டுமே மிகவும் மோசமாக விளையாடினர்.

இவர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் குறைவான வித்தியாசத்தில் விளையாடினர். இந்நிலையில் மணிக்கூண்டு டாஸ்கில் மிகவும் மோசமாக விளையாடி கடைசி இடத்தை பிடித்த, அணியை ஜெயிலுக்கு அனுப்ப கூறி பிக்பாஸ் கூறியதையும், போட்டியாளர்கள் அனைவரும் ஒருமனதாக பாலாஜி மற்றும் சுசியை தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பியதையும் முதல் ப்ரோமோவில் பார்த்தோம்.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ஜெயிலில் உள்ள... சுசி மற்றும் பாலா இருவரும், ஜெயிலுக்கு வந்த காரணத்தையே கோர்வையாக வைத்து பாட்டு பாடி கொண்டிருக்கிறார்கள். அப்போது பாலா சுசி இருவரும் வீட்டில் இரண்டு குரூப் உள்ளதாகவும், ஆஜித் தான் நான் சரியாக விளையாடவில்லை என்று காரணத்தை அடுக்கியதாக தெரிவிக்கிறார்.

அதுவரை நன்றாக பேசி கொண்டிருந்த சுசி, திடீர் என பாலாவை கடுப்பேற்றுவது போல் பேசுகிறார். இதனால், உன்கூட சிறையில் போட்டு என்னை சாவடிக்குறாங்க என புலம்பும் காட்சி வெளியாகியுள்ளது. 

அந்த புரோமோ இதோ...