மிகவும் இயல்பான கதைகளை இயக்கி, வெற்றி இயக்குனராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பாலாஜி சக்திவேல் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு ஃபர்ஸ்ட் லூக்குடன் வெளியாகியுள்ளது. 

மிகவும் இயல்பான கதைகளை இயக்கி, வெற்றி இயக்குனராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பாலாஜி சக்திவேல் இயக்கும் படம் குறித்த அறிவிப்பு ஃபர்ஸ்ட் லூக்குடன் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக இருந்து, பின்னர் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான 'சாமுராய்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்கும் படங்கள் வழக்கமான கமர்ஷியல் படங்களை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும், இயல்பாகவும் இருந்தது இவரை ரசிகர்கள் மத்தியில் தனியாக அடையாளப்படுத்தியது.

குறிப்பாக இவர் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான 'காதல்', தமன்னா நடித்த 'கல்லூரி', மனிஷா யாதவ் நடித்த 'வழக்கு எண் 18 / 9 ' ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. எண் 18 / 9 படத்திற்காக தேசிய விருது, உட்பட பல விருதுகளைப் பெற்றார். இதைத்தொடர்ந்து, 'யார் இவர்கள்', 'ரா ரா ராஜசேகர்' ஆகிய படங்களை இயக்க உள்ளதாக அறிவித்தார் பாலாஜி சக்திவேல். பின்னர் அந்த படங்கள் பாதியிலேயே கைவிடப்பட்டது. 

சமீபத்தில் இயக்குனர் என்பதைத் தாண்டி, 'அசுரன்' , 'வானம் கொட்டட்டும்' ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். தற்போது சுமார் ஒன்பது வருடங்களுக்குப் பின் மீண்டும் 'நான் நீ நாம்' என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இந்த படம் குறித்து வெளியாகியுள்ள தகவலில் நடிகர் வீரா மற்றும் சாந்தினி முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாகவும், சுரேஷ்குமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ஜாவித் ரியாஸ் இசையமைக்க யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தை ஃப்ளூ மூன் கிரியேஷன் தயாரிக்கிறது. சுமார் ஒன்பது வருடங்கள் கழித்து பாலாஜி சக்திவேல் இயக்கிய உள்ள இந்த படத்தின் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.