பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 16 போட்டியாளர்களில் ஒருவர் மாடலிங் துறையை சேர்ந்த பாலாஜி முருகதாஸ். பல பிரபலங்கள் கடந்து வந்த முள்நிறைந்த பாதையை போல்... இவருடைய வாழ்க்கையில் இருந்த, கஷ்டங்களை நேற்று முன் தினம் கண்ணீரோடு கூறினார்.

மேலும் செய்திகள்: இன்று உடைய போகும் இதயங்கள்...? துவங்கி வைத்த கமல்..!
 

அப்பா அம்மா பாசத்திற்காக பல நாட்கள் ஏங்கியதாகவும், ஆனால் அப்பா அம்மா இருவருமே தன்னை கவனிக்கவில்லை என்றும் இருவருமே குடிபோதையில் இருப்பார்கள் என்றும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவார்கள் என்றும் கூறியிருந்தார். மேலும் ஒரு குழந்தையை பெற்று நல்லபடியாக வளர்க்க தெரியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் அவர் ஆவேசமாக கேட்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. 

பாலாஜியின் கதையை கேட்டு போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கண் கலங்கினர் என்பதும் நேற்றைய நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன் இதுகுறித்து உருக்கமாக பேசியதில் இருந்தே தெரிந்தது. அந்த இருளில் இருந்து கிடைத்த வெளிச்சம் என பாலாஜியை புகழ்ந்து தள்ளினார்.

மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டி இருக்கும் டைட் டிரஸ்! முட்டி தெரிய கவர்ச்சியில் ஹாட் போஸ் கொடுத்த விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா!
 

இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் பீரிலேயே குளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீச்சல் குளத்தில் நின்றபடி, பீரை தலையில் ஊற்றி குளிக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், பாலாஜி முருகதாஸ் பற்றி விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய யாஷிகா... புதுமையான ஹேர் ஸ்டைலில் படு கிக்காக பதிவிட்ட போட்டோஸ்...!
 

 

அதே நேரத்தில், பாலாஜியின் அட்மின் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள ஒருசில சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பாலாஜியின் பீர் குளியல் வீடியோ இதோ...