நடிகர் தனுஷ் நடிக்கும் மாரி-2 படத்திலும் நடிகர் ரோபோ சங்கர் மீண்டும் இணைகிறார்.

இயக்குனர் பாலாஜி மோகன்தான். ரோபோ சங்கரை வாயை மூடி பேசவும்’ படத்தில் காமெடியனாக நடிக்க வைத்தார். அதற்கு முன்பு யாருமே கொடுக்காத அளவுக்கு அவருக்கு வெயிட்டான காமெடியன் ரோல் கொடுத்திருந்தார். அதில் ரோபோ சங்கரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

அதேபோன்று பாலாஜி மோகன், தனுஷை வைத்து இயக்கிய ‘மாரி’ படத்திலும் முழுக்க தனுசுடன் வருவது போன்ற வேடத்தில் ரோபோ சங்கரை நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

இந்த நிலையில், தற்போது மாரி-2 படத்தை இயக்க தயாராகி விட்ட பாலாஜிமோகன், அந்த படத்தின் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தொடங்கி விட்டார். அதோடு, படத்திற்கான நடிகர் நடிகைகளையும் தேர்வு செய்து வரும் அவர், முதல் நபராக ரோபோ சங்கரை தேர்ந்தெடுத்தார்.

அதோடு, மாரி படத்தை போலவே இந்த படத்திலும் தனுஷின் நண்பராக நடிக்கிறார் ரோபோ சங்கர்.

‘மாரி’யில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்தார். ஆனால், இந்தப் படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்பது கொசுறு தகவல்.