பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா கட்டி காப்பாற்றிய அன்பு குரூப்பில் இருந்து, காந்த வாரம் நிஷா, ஜித்தன் ரமேஷ் என இரு தூண்கள் வெளியேறிய பின், மெல்ல மெல்ல ஆட்டம் கண்டு வருகிறது. ஒருவரை ஒருவர், விட்டு கொடுக்காமல் காப்பாற்றி கொண்டு வந்த அன்பு குரூப் அவர்களுக்குள்ளேயே கோழி பண்ணை டாஸ்கிங் போது, மோதி கொண்டதை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் கோழி பண்ணை டாஸ்கில், சிறப்பாக விலையாக இரு போட்டியாளரை நாமினேட் செய்ய கூறி சொன்ன போது, போட்டியாளர்கள் நாமினேட் செய்த படலம் தான் தற்போதைய புரோமோவில் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் அர்ச்சனாவுடன் கடுமையாக மோதிய அனிதா, இந்த வாரம் அர்ச்சனாவை சிறந்த போட்டியாளர் என நாமினேட் செய்கிறார். அதேபோல் ரியோ, சோம்,ஆரி ஆகிய மூவரும் பாலாவை தேர்வு செய்கின்றனர். சோம் மற்றும் ரம்யாவை அர்ச்சனா தேர்வு செய்கிறார், பாலாஜி, ஷிவானியை தேர்வு செய்கிறார். எனவே இந்த வாரம் சிறந்த போட்டியாளர்களாக பாலா, தேர்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. மற்ற இருவர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.