கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த, உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டது, சேலத்தை சேர்ந்த ஜோதிடர் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என சரியாக கணித்து கூறியது.

அகில இந்திய அளவிலான, ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும்  பெற்றுள்ள இவர்,  இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும்.. அதேசமயம் தோற்க நேரிடும் என்றும் கடந்த ஜனவரி -1ஆம் தேதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார். ஆரம்பத்தில் இதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றாலும், பின் இந்த சம்பவம் உண்மையானதும் இவரிடம் ஜோதிடம் பார்க்க பலர் ஆர்வம் காட்டினர்.

இந்நிலையில் இவர், தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் யார் வெற்றி பெறுவார் என்பதை கணித்து கூறியுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள பாலாஜி ஹாசன், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் தான் வெற்றி பெறுவார் என கூறியுள்ளார். அப்படி பார்த்தல் இந்த நிகழ்ச்சியில்,  வெளிநாட்டில் இருந்து கலந்து கொண்டுள்ள ஆண் போட்டியாளர்கள், இலங்கையை சேர்ந்த தர்ஷம் மற்றும், மலேசியாவை சேர்ந்த, முகேன் ராவ் ஆகியோர்.

அதே போல் இரண்டாம் இடத்தை பிடிக்க போவது ஒரு பெண் போட்டியாளர் என கூறியுள்ளார். எனவே ஒரு வேலை லாஸ்லியா, அல்லது ஷெரின் ஆகியோர் பைனல் வரை செல்லும் போட்டியாளர்கள் லிஸ்லிட்டில் இருப்பதால் இரண்டாவது இடத்தை இவர்கள் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சில், ஆரம்பிக்கப்பட்ட தேதி, நேரம், இடம் ஆகியவற்றை வைத்து இந்த ஜோதிடத்தை கணித்துள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பாலாஜி ஹாசன். இறுதியில் பிக்பாஸ் சீசன் டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது இன்னும் 27 நாட்களில் தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருப்போம். 

நாம் ஏன் அவரை டூபாக்கூர் என்று சொல்கிறோம் என்றால், மாநில அரசியலையும், தேசிய அரசியலையும், ஜூனியர் விகடன்,  நக்கீரன் போன்ற முக்கிய இதழ்களில் படித்தும், பிரபல ஆங்கில தொலைக்காட்சிகளை பார்த்தும் சரியாக கணித்து வருகிறார். அதனால் அவர் அஸ்ட்ரோலஜர் (astrologer ) அல்ல ஒரு நல்ல பிரடிக்டர்  (கணிப்பவர்).

தனது அருமையான கணிக்கும் சக்தியை வைத்து கொண்டு, நல்ல முறையில் பி.ஆர் செய்து கொண்டும் , பொத்தாம் பொதுவில் ஜோசியம் கூறி வருகிறார் பாலாஜி ஹாசன். குறிப்பாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை பொறுத்தவரை இளமையாகவும்,  அதிக அறிவுத்திறனோடும் செயல்படுபவர்கள் மூவருமே வெளிநாட்டை சேர்ந்தவர்கவர்கள் தான்.  இலங்கையை சேர்ந்த தர்ஷன், லாஸ்லியா, மலேசியாவை சேர்ந்த முகேன் அதிகமாக மக்களை கவர்ந்து வருகிறார்கள். 

ஊர் உலகில் உள்ள அனைவருக்குமே தெரியும். இவர்களில் ஒருவருக்கு தான் பிக்பாஸ் பட்டம் கிடைக்கும் என்று. இதில் என்ன இவர் ஜோதிடம் கூறி விட்டார் என கேள்வி எழுப்புகிறார்கள் இவருடைய ஆரூடத்தை படித்த வாசகர்கள். முகேன் தான் ஜெயிப்பார் அல்லது லாஸ்லியா தான் ஜெயிப்பார் என அடித்து கூறி இருந்தால் இவரின் ஜோதிடத்தை ஒற்று கொள்ளலாம் என கூறுகிறார்கள் ஜோதிடம் பற்றி நன்கு அறிந்தவர்கள்.