balaji boldly says this in front of his wife

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை, கடந்த ஞாயிறு அன்று கமலஹாசன் தொடங்கி வைத்தார். திரையுலகில் பல்வேறு பிரபலங்களுக்கும், கூடுதல் புகழையும் வாய்ப்பையும் தேடித்தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. இதனாலேயே இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகத்தில் கலந்து கொள்ள அனேக பிரபலங்கள் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால் நமீதா மற்றும் காயத்திரி போல, மக்களின் வெறுப்பிற்கு காரணமாகிவிட்டால் என்ன செய்வது? என பயந்து பிக் பாஸின் பெயரை கேட்டாலே, தெரித்து ஓடிய பிரபலங்களும் உண்டு.

அந்த வகையில் இம்முறை பிக் பாஸில் கலந்து கொண்டிருக்கும் 16 பிரபலங்களில், பலர் மிகவும் சுவாரஸ்யமான பின்னணியை கொண்டிருக்கின்றனர். அதிலும் ஏற்கனவே சண்டை, சச்சரவு, போலீஸ், விசாரணை என ஊரறிய பிரிந்து போன தம்பதியினரான, பாலாஜி மற்றும் அவரது மனைவியின் வரவு, பிக் பாஸில் மிகவும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

இனி பாட்டிற்கு, பஞ்சாயத்திற்கு, நடனத்திற்கு, காமெடிக்கு என தனித்தனி நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம். அதை எல்லாம் ஒன்றாக்கி உருவாக்கி இருக்கின்றனர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை.

இந்த பிக் பாஸ் மூலம், எப்படியாவது தன் மனைவியுடனான சண்டையை சமாதானம் செய்து, சேர்ந்து வாழ வேண்டும் என கூறி இருக்கிறார் பாலாஜி. அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் நேற்று பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்தார். அதில் இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர் யார்? என கூறவேண்டும். எல்லோரும் பாலாஜி அவர் மனைவியின் பெயரை தான் கூற போகிறார் என எதிர் பார்த்தனர். ஆனால் அவரோ செண்ட்ராயன் பெயரை கூறிவிட்டார்.