மணிக்கூண்டு டாஸ்கில் மிகவும் மோசமாக விளையாடி கடைசி இடத்தை பிடித்த, அணியை சேர்ந்த, பாலா மற்றும் சுசி ஆகிய இருவரையும் அணைத்து போட்டியாளர்களும், ஒருமனதாக தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பினர். 

இதை தொடர்ந்து ஜெயிலில் சுசியை சமாளிக்க்க முடியாமல் பாலா புலம்பி தள்ளும் காட்சி இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மூன்றாவதாக வெளியாகியுள்ள புரோமோவில், பாலா இல்லாமல் தனிமையில் இருக்கும் ஷிவானியை போட்டியாளர்கள் கலாய்ப்பதும், பாலா அவரை தேற்றும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இந்த கிண்டலுக்கு சாம் தான் பிள்ளையார் சுழி போடுகிறார். இன்று பாலா இல்லாமல் நீ தனியா என்ன செய்ய போறியா என கேட்கிறார். அதற்க்கு ஷிவானி நான் எப்போதுமே தனியாகத்தான் இருக்கிறேன் என கூறுகிறார். இவரை தொடர்ந்து ரம்யா இன்று ஒரு நாள் நீங்கள் எங்களுடன் நேரம் செலவிடுவீர்கள் என நம்புவதாக கூறுகிறார்.

உடனே ரம்யா சும்மா இருங்க என, ஷிவானி அந்த இடத்தை விட்டு நகர்வதும், பாலா ஜெயிலில் இருந்தபடியே ஷிவானியில் தலையில் கை வைத்து, சமாதம் செய்யும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த சீனில் தான் இருவருக்குள்ளும் செம்ம ரொமான்ஸ் நடக்கிறது.

இதுகுறித்த ப்ரோமோ இதோ...