பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் பல பிரச்சனைகளுக்கு அஸ்தீவாராம் போட்ட கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்கிறது. இதனை கமல் கூட, ஞாயிற்று கிழமை பேசும் போது தெரிவித்திருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் பல பிரச்சனைகளுக்கு அஸ்தீவாராம் போட்ட கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்கிறது. இதனை கமல் கூட, ஞாயிற்று கிழமை பேசும் போது தெரிவித்திருந்தார். முதலில் கால் சென்டர் ஊழியர்களாக இருந்த அனைவரும், தற்போது காலராக மாறுகிறார்கள். காலராக இருந்தவர்கள் கால் சென்டர் ஊழியர்களாக மாறுகிறார்கள் இதுகுறிவித்து தெரிவிக்கும் விதமாக முதல் புரோமோ வெளியானது.
முதல் காலராக பாலாஜி, ஆரியை தேர்வு செய்து தன்னுடைய கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பினார் என்பதையும், அதற்க்கு ஆரி பதில் சொல்ல முடியாமல் திணறியதையும் முதல் புரோமோவில் பார்த்தோம்.
தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், நான் பதில் சொல்ல கூடாது... என பாலாஜி போனில் பேசுகிறார். பின்னர் சனத்திடம் பேசும் ஆரி அவன் கருத்து மட்டும் வரணும் அது எனக்கு எதிராக இருக்க வேண்டும் என பாலாஜி நினைப்பதாக சொல்கிறார்.
இதை தொடர்ந்து அர்ச்சனா நிஷாவிடம் பாலாஜி பேசும் காட்சி காட்டப்படுகிறது. இதில் நிஷா நீ கேட்டுருக்கலாமோ என நினைக்கிறன் என்று கூற இதற்கு பாலாஜி... அவரது பதில் கூறுகிறார். பின்னர் ஆரி பேசும் கட்சிகளும் மாறி மாறி காட்டப்படுகிறது... ஒரு கட்டத்தில் இனி குரலை உயர்த்தி கூட யாரிடமும் பேச போவது இல்லை என தெரிவித்து அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
ஒரு நாளில்... அதுவும் ஆரியுடன் பேசியதும் திருந்தி விட்டது போல் பாலாஜி பேசுவதால் இவர்களுக்குள் எப்படி பட்ட விவாதம் சென்றிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் எகிறியுள்ளது.
#Day58 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Vb0G19ozP8
— Vijay Television (@vijaytelevision) December 1, 2020
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 1, 2020, 1:05 PM IST