balaji 8 years doubt and secret contact nithiya open talk
தாடி பாலாஜியின் மனைவி நித்தியா நேற்று தன் மகளுடன் சென்னை பிரஸ் க்ளப்புக்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், தனது கணவர் தாடி பாலாஜி, தன்னைப் பற்றிப் பரப்பும் வதந்திகள் குறித்து வருத்தத்துடன் கூறினார். “நான் சுமார் 20 ஆண்களுடன் தவறான தொடர்பில் இருப்பதாக அவர் கூறுகிறார். இருப்பினும் ஏன் என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என அவர் கேட்கிறார். இதில் இருந்தே உங்களுக்குப் புரிகிறதா? யார் மீது தவறு இருக்கிறது என்று!” என செய்தியாளர்களிடம் தன் வாதத்தை முன் வைத்தார்.
தொடர்ந்து, பாலாஜி கடந்த சில தினங்களாக எங்கள் இருவருக்கும் பிரச்சனை இருக்கிறது என்று கூறுவது உண்மையல்ல. நான் வேலை செய்யும் அனைத்து அலுவலக ஆண் நண்பர்களுடனும் என்னை இணைத்து வைத்து அசிங்கப்படுத்தியுள்ளார். இந்தக் கொடுமை எனக்கு கடந்த 8 வருடங்களாக அரங்கேறி வருகிறது” என்று கூறிய நித்தியா, தற்போது இந்தப் பிரச்சனை தங்களுக்குள் முற்றுவதற்குக் காரணம் அவருடைய முதல் மனைவிதான் என குற்றம் சாட்டியுள்ளார்.
“கடந்த சில தினங்களாக அவருடைய முதல் மனைவியோடு அவர் மீண்டும் ரகசியமாக தொடர்பு வைத்துள்ளது எனக்கு தெரியும். அவருடைய முதல் மனைவியின் மகனுக்கு அவர் புதிதாக சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். முதல் மனைவியும் அடிக்கடி அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இது ஒரு சிறு வாக்குவாதமாக ஆரம்பித்து தற்போது நாங்கள் பிரிய இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ள நித்தியா இதற்கு நிரந்தர தீர்வு விவாகரத்து பெறுவது தான் எனக் கூறியுள்ளார்.
