24 பரிட்சை பேப்பர்களை 20 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கும் சில்வர் ஜூப்ளி இயக்குநர்...
இந்தக் காலம் போன காலத்தில் எதற்கு வக்கீல் படிப்பு ஆசையெல்லாம் என்று கேட்டால், ‘இது எனது நீண்ட கால ஆசை. ஒருவேளை சினிமாவில் நான் ஜொலிக்காமல் போயிருந்தால் கண்டிப்பாக வக்கீலாகத்தான் ஆகியிருப்பேன்’என்று சிரிக்கிறார் அவர்.
பேரன், பேத்திகளைக் கல்லூரிக்கு அனுப்பவேண்டிய தன்னுடைய 64 வயதில், கடந்த ஞாயிறன்று சட்டப்படிப்புக்கான பரிட்சை எழுதினார் பிரபல மலையாள இயக்குநரும் நடிகருமான பாலச்சந்திர மேனன்.
1978 ம் ஆண்டு ‘உத்ராட ராத்ரி’படத்தின் மூலம் இயக்குநராக எண்ட்ரி அளித்த பாலச்சந்திர மேனன் 2018 வரை மலையாளத் திரையுலகின் தவிர்க்கமுடியாத இயக்குநர். தனது வித்தியாசமான கதைகள் மற்றும் நடிப்பின் மூலம் கேரள பாக்கியராஜ் என்று அழைக்கப்பட்டவர்.
இந்தக் காலம் போன காலத்தில் எதற்கு வக்கீல் படிப்பு ஆசையெல்லாம் என்று கேட்டால், ‘இது எனது நீண்ட கால ஆசை. ஒருவேளை சினிமாவில் நான் ஜொலிக்காமல் போயிருந்தால் கண்டிப்பாக வக்கீலாகத்தான் ஆகியிருப்பேன்’என்று சிரிக்கிறார் அவர்.
90களில் தான் மிகவும் பிசியாக இருந்தபோது எல்.எல்.பி. [Bachelor of Legislative Law] தேர்வுக்கு அப்ளை செய்த மேனன் அப்படிப்புக்கான 24 பேப்பர்களை கடந்த 20 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது அவரது படக்கதையை விட சிறந்த காமெடி. ’என் பக்கத்துல உக்கார்ந்து பரிட்சை எழுதின பொண்ணு என் மகளை விட சின்னவ’ என்று வெட்கப்படுகிறார்.
ஒரு வழியாக கடந்த ஞாயிறன்று கடைசி பேப்பரை எழுதி முடித்து ஒரு கல்லூரி மாணவனுக்கான டென்சனுடன் ரிசல்டுக்காக காத்திருக்கிறார். ’இதில் பாஸாகிவிட்டால் இனி நான் அட்வக்கேட்டாக்கும். ஏதாவது ஒரு நல்ல சமூக நீதி கேஸுக்காக வாதாடவும் செய்யலாம்’ என்று சிரிக்கிறார் பல சில்வர் ஜூப்ளிகளைக் கொடுத்த பாலச்சந்திர மேனன்.