bala said remove Wont Wear Coat neeya naana gopinath

10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா என நட்சத்திரங்களால் விழா மேடை ஜொலித்தது.

இந்த விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதினை “விக்ரம் வேதா” படத்துக்காக புஷ்கர் – காயத்ரி இணைக்கு இயக்குநர் பாலா வழங்கினார். அப்போது பாலாவிடம் கோபிநாத் சில கேள்விகள் கேட்க முயன்றார்.

அப்போது இயக்குநர் பாலா, “உங்களுக்கு என்று தனி மரியாதை இருக்கிறது. உங்களது புத்தகங்களுக்கென்று சிலர் வீட்டில் தனியாக செல்ஃப் வைத்திருக்கிறார்கள். உங்களை நீயா நானா மாதிரியான நிகழ்ச்சியிலும் இல்லையென்றால் இதே மாதிரியான விருது வழங்கும் நிகழ்ச்சியில் தான் பார்க்கிறேன். நீங்க வந்து ஸ்டார் போட்ட கோட் எல்லாம் போடாதீங்க. நல்லாயில்லை. தயவு செய்து கழட்டிவிடுங்கள். நன்றி” என்று தெரிவித்தார்.

பாலாவின் பதிலால் உணர்ச்சியில் பொங்கிய கோபிநாத், “பாலா சார் என்னை எழுத்தாளர் என்று ஏற்றுக் கொண்டார். இதற்கு காலத்திற்கு நன்றி சொல்வேன் சார். ஆனால், நான் கோட்டைக் கழட்டினால் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். என்ன சார் செய்வது என நெகிழ்ந்துப்போனார்.