முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசியல் தற்போது பெரிதும் ஆட்டம் கண்டு வருகிறது. முதலமைச்சர் பதவியை நிரந்தரமாக தன் வசம் ஆக்கிக்கொள்ளப்போவது யார்...??? 

ஜெயலலிதா முதல்வராக கைகாட்டிய ஓ.பன்னீர்செல்வமா, அல்லது 30 ஆண்டுகளுக்கு மேல் உடன் இருந்த தோழியா என யாருக்குமே விடைதெரியாத விடுகதையாய் இருக்கிறது தமிழக அரசியல் சூழல்.

தற்போது பலரும் அம்மா அவர்கள் கைகாட்டி சென்ற பன்னீர்செல்வம் தான் முதல்வராக வரவேண்டும் என கூறிவரும் நிலையில் பல சினிமா பிரபலங்களில் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது பிரபல இயக்குனரான பாலா ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இன்னும் பல பிரபலங்கள் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.