Asianet News TamilAsianet News Tamil

நீ ஆம்பள பையன் தான..! பாலாஜியை வெறுப்பேற்றிய ஆரி... விறுவிறுப்பாக வெளியான புரோமோ..!

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது.  நேற்று இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில் இன்றைய முதல் புரமோ  மூன்றாவது சுற்று நடைபெற்றதையும், அதில் கேபி வேறு லெவலுக்கு விளையாடி பாலாஜியை வெறுப்பேற்றியதையும் பார்த்தோம்.
 

bala and aari again fight in finale task
Author
Chennai, First Published Jan 5, 2021, 1:06 PM IST

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது.  நேற்று இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில் இன்றைய முதல் புரமோ  மூன்றாவது சுற்று நடைபெற்றதையும், அதில் கேபி வேறு லெவலுக்கு விளையாடி பாலாஜியை வெறுப்பேற்றியதையும் பார்த்தோம்.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள நான்காவது புரோமோவில்... ஏற்கனவே காண்டாக இருக்கும் பாலாஜியை வெறுப்பேற்றும் விதத்தில் ஆரி விளையாடுகிறார். இது குறித்த புரோமோ தான் தாற்போது வெளியாகியுள்ளது.

bala and aari again fight in finale task

பிக்பாஸ் ஒலி எழுப்பியதும் ஷிவானியிடம் இருந்து எடுத்து எதையோ எடுத்து செல்வது தான் டாஸ்க் என தெரிகிறது. ஆரி ஓடி சென்று எடுத்ததும், பாலாஜி ஓடி வருவது தான் உங்கள் ஸ்டேட்டர்ஜி என்றால் எனக்கும் ஸ்டேட்டர்ஜி தெரியும் என்று அவர் வரும் பாதையில் இரண்டு மர பொருட்களை போடுகிறார்.

bala and aari again fight in finale task

இப்படி விளையாடுகிறாய் தடுக்கி கீழே விழுந்தால் என்ன ஆவது என பாலாஜியிடம் ஆரி கேட்க, அதற்க்கு பாலாஜி அப்படி என்றால் ஓடாதீர்கள் என கூறுகிறார். இதற்க்கு ஆரி நீ ஆம்பள பையன் தானே ஓடி வந்து பிடி என சொல்கிறார். இதற்கு பதில்கொடுக்கும் பாலாஜி...   உங்களுக்கு புத்திசாலித்தனம் இருக்கு, எனக்கு பலம் தான் இருக்கு என கூறி, நான் நன்றாக தான் விளையாடுகிறேன் என கூறுகிறார். பாலாஜியை வெறுப்பேற்றுவது போல்.. நீ நல்ல தான் விளையாடுகிறாய் என ஆரி கூறும் காட்சிகள் தற்போதைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய இரண்டாவது புரோமோ இதோ... 
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios