இயக்குனர் திலகம் திரைக்கதை மன்னன் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் ஆன கே.பாக்யராஜ், 70வது மற்றும் 80பது களில் முன்னணி இயக்குனராக வலம் வந்த இயக்குனர் பாக்யராஜ் புரட்சி தலைவர் எம்.ஜி .ஆரின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின்னர் ஏற்பட்ட பல் வேறு அரசியல் சூழல் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கிய இவர் 'எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம்' என்கிற கட்சியையும் தொடங்கினர்.

அதன் பின்னர் அந்த கட்சியை கலைத்த பாக்கியராஜ் சில காலம் கழித்து திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் மீண்டும் அரசியலை விட்டு ஒதுங்கிய அவர் திரைப்படங்களில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.

சில வருடங்கள் கழித்து அதிமுகவில் இணைய வேண்டி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க பல முறை தொடர்புகொண்டும் அது முடியாமல் போனது.

இந்நிலையில் தற்போதைய அரசியல் சூழல் பல திருப்பங்களை நாள் தோறும் ஏற்படுத்தி வருகிறது. இந்த பரபரபபன சூழ்நிலையில் சசிகலாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து நேரில் சந்திப்பது, அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.