bakru said about actor ajith
விருது வழங்கும் விழாவில் அனைவரையும் நெகிழ வைத்த அஜித்..!
மலையாள நடிகர் கின்னஸ் பக்ரு,தல அஜித் பற்றி சுவாரஸ்யமான தகவலை ஒரு நிகழ்சியில் அனைவரின் முன் தெரிவித்து உள்ளார்.
தமிழில் விஜய் நடித்த காவலன் படத்தில் நடித்தவர் தான் கின்னஸ் பக்ரு.இவருடைய உண்மையான பெயர் அஜய்.சினிமாவிற்காக பக்ரு என பெயர் மாற்றி உள்ளார்.
மலையாள படத்தில் பிசியாக உள்ள பக்ரு,தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்
அந்த நிகழ்ச்சியில்,நடிகர் அஜித் பற்றி கருத்து தெரிவித்து உள்ளார்.
அப்போது,"நான் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு சென்று இருந்தேன்..அப்போது அவருடன் நான் போட்டோ எடுக்க ஆசைப்பட்டேன்...
அப்போது நான் மேடை ஏற முயன்றதை பார்த்த நடிகர் அஜித் அவர்கள்,அவரே கீழே இறங்கி வந்து என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வு என்னால் மறக்க முடியாது ....அவர் ஒரு சிறந்த மனிதர் என்று சொல்லி மனம் நெகிழ்ந்து உள்ளார்.
