இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய்யின் பைரவா திரைப்படம் வெளிவர இன்னும் 4 நாட்கள் உள்ள நிலையில். படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பைரவா பெரிய அளவில் வெளிவரவுள்ளது. வழக்கமாக வெளிவரும் நாடுகளோடு சேர்த்து தற்போது சில புதிய நாடுகளிலும் பைரவா வெளிவரவுள்ளது.

நைஜீரியா, கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளோடு சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் பைரவா வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.

இதன் மூலம், நாடுகள் எண்ணிக்கையில் பைரவா புதிய சாதனை படைத்துள்ளது என்கிற செய்தி ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.