பரதன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்திற்கு பெரும் எதிர்ப்பார்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது இப்படத்தின் கதை இது தான் என சமூக வலைத்தளங்களில் ஒரு புது கதை உலா வந்து கொண்டிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் கீர்த்தி சுரேஷை துரத்தி, துரத்தி காதலிக்கும் ஜாலியான காதலனாக தான் என்ட்ரி கொடுக்கிறாராம் நம்ப விஜய்.

ஆனால், கீர்த்தி தன் ஊரில் மெடிக்கல் காலேஜ் மாணவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை அரசாங்கத்திடம் சொல்ல முயற்சி செய்வாராம்.

அவரால், அது முடியாமல் போக, தன் காதலியின் பிரச்சனை, தன் பிரச்சனை என விஜய் அதை கையில் எடுத்து பிறகு ஆடும் ருத்ரதாண்டவமே பைரவா படத்தின் கதை என கூறப்படுகின்றது.


இதே போல் பலரால் எதிர்பார்க்க பட்ட , தெறி, கபாலி, போன்ற படங்களுக்கும் பல கதைகள் உலா வந்தது என்பது குறிப்பிடதக்கது.

அதனால் இணைய தளங்களில் வரும் கதையை நம்ப வேண்டாம்..... பொங்கல் ஸ்பெஷல்லாக திரைக்கும் வரும் படங்களை திரையரங்கம் வந்து பார்க்கும்படி கூறியுள்ளனர் படக்குழுவினர்.