Asianet News TamilAsianet News Tamil

பைரவா படத்தில் விஜய் பாடிய பாடல் எப்படி இருக்கும் - சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல்.....!!!

bairava movie-vijay-sing-a-song
Author
First Published Nov 27, 2016, 11:32 AM IST


இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒரு பாடலை பாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

அந்த வரிசையில்  'பைரவா' படத்திலும் ஒரு பாடலை  விஜய் பாடியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது.
 
இந்நிலையில் இந்த பாடல் குறித்து முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

விஜய் இந்த படத்தின் பாடலை நம்ப முடியாத வகையில் மிகவும் அபாரமாக பாடியுள்ளார்என்றும . இந்த பாடலுக்கு பூமியே அதிரும் வகையிலான டான்ஸ் உறுதி'என்று பதிவு செய்துள்ளார்.
 
சந்தோஷ் நாராயணனின் இந்த பதிவை அடுத்து ரசிகர்களிடம்  இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு இன்னும்  பலமடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios