இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் பல திரையரங்கங்கள் வெறிச்சோடியது, ஆனால்
குடியரசு தின விடுமுறை தினத்தில் பல திரையரங்குகளில் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை ஓமலூரில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் ஒளிபரப்பப்பட்டதாக அந்த பேருந்தில் பயணம் செய்த விஜய் ரசிகர் ஒருவர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். 

இந்த தகவலை அடுத்து தாரமங்கலம் அருகே விஜய் ரசிகர்கள் அந்த பேருந்தை சிறைபிடித்து காவல்துறையினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு அபராதம் விதித்தனர். திருட்டு டிவிடிக்கு எதிராக ரசிகர்களே தற்போது களமிறங்கியுள்ளதால் மீண்டும் திரையுலகம் ததிருட்டு விசிடியில் இருந்து மேலும் என கூறப்படுகிறது .