இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் பொங்கல் கொண்டாட்டத்திற்கு முன்பே விஜய் ரசிகர்களுக்காக திரையிடப்படுகின்றது.

ஜனவரி 12ஆம் தேதி அதாவது நாளை இந்த படம் ரிலீஸ் ஆனாலும் முந்தைய நாள் பல நாடுகளில் பிரிமியர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகம் உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகாலை காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலகின் முதல் 'பைரவா' திரைப்பட காட்சி திரையிடப்படும் நாடு மற்றும் திரையரங்குகள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இன்று அதாவது ஜனவரி 11ஆம் தேதி புதன்கிழமை சிங்கப்பூரில் உள்ள 'பாம்பே டாக்கீஸ்' என்ற திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு திரையிடப்படுகிறது. இதுதான் உலகின் முதல் 'பைரவா' காட்சி ஆகும்.

இதேபோல் இரவு 10 மணிக்கு கேத்தி மற்றும் ஜி.வி.ஒய்இஷுன்  ஆகிய திரையரங்குகளிலும் 'பைரவா' திரையிடப்படுகின்றது.