தமிழ் சினிமாவில் கடந்த வருடம் மாபெரும் வசூல் செய்த படம் பாகுபலி. இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி இப்படத்தில் வரும் ஒவ்வொருவரின் கதாபாத்திர தேர்வும் மிகச்சிறப்பாக தேர்வு செய்திருந்தார்.

பாகுபலி முதல் பாகத்தில் வில்லனாக நடித்த ராணா பிரம்மாண்ட உடல்வாகுடன் பல்லாலதேவனாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டினார்.

தற்போது இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் ராணா மேலும் உடற்பயிற்சி செய்து ராட்சஷ உருவத்தில் மாறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகுபலி படத்திற்கு பிறகு பெங்களூரு நாட்கள் படத்தில் நடித்த அந்த ராணாவா இது என அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார் ராணா.