எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்ட படைப்பாக உருவான பாகுபலி-2 பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனைப் படைத்தது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த படம் பாகுபலி 2.

ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியீட்டுக்கு முன்பே பல சாதனைகளை புரிந்தது.

இதனையடுத்து, உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் 100 நாள்களை எட்டியுள்ள நிலையில் ரூ.1700 கோடி வசூல் படைத்து உலக சாதனையையும் படைத்தது,

இந்த நிலையில், இப்படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்கள் அனைத்தும் தற்போது சுற்றுலா தளமாக மாறி வருகிறது.

அதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து, வாயை[ப் பிளந்து பார்த்து வருகின்றனர்.

பள்ளி / கல்லூரிகளுக்கான டூர், கார்ப்பரேட்டுகளுக்கான டூர், பிரிமீயம் டூர் மற்றும் பொதுவான டூர் என பல்வேறு பிரிவுகளில் இந்த டூர் வசதி செய்யப்பட்டுள்ளது.

படத்தோட செட்டை வைத்து வசூலிப்பதிலும் பாகுபலி தனி சாதனையை படைக்கும் போல…