bahubali release conform
இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பாகுபலி 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ளது. அனைத்து இடங்களிலும் எந்த தடையும் இல்லாமல் ரிலீஸ் செய்யவுள்ள பாகுபலி 2 திரைப்படத்திற்கு.
தமிழில் மட்டும் திரையிடக்கூடாது என கார்த்திக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கில், பாகுபலி 2 , திரைப்படத்தின் தமிழ் உரிமையை பெற்ற கே தயாரிப்பு நிறுவனம், தன்னிடம் வாங்கிய ரூ . 1 . 48 கோடியை வட்டியுடன் திருப்பி செலுத்தினால் மட்டுமே படத்தை திரையிட வேண்டுமென்றும் , மேலும் படத்தின் அனைத்து உரிமையையும் முடக்க வேண்டுமென்றும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, ஐகோர்ட் நீதிபதி, திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் படத்தின் உரிமைப்பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளதாக தீர்ப்பளித்துள்ளார். இதனால் கண்டிப்பாக நாளை பாகுபலி 2 திரைப்படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
