தென்னிந்திய சினிமாவையே வாய் பிளக்க வைத்த படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌலியின் உழைப்பிற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தது.

இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்திருந்தனர், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

ராஜமௌலி முதல் பாகத்தில் யாராலும் யூகிக்க முடியாத ஒரு பெரிய டுவிஸ்ட்டுடன் முடித்திருந்ததால் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த பிரமாண்ட திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இந்த தகவல் படக்குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .