ராஜமெளலி இயக்கத்தில் நேற்று வெளியான பாகுபலி திரைப்படம் முதல் நாளிலேயே 100 கோடி ரூபாயை வசூலாக ஈட்டியுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

பிரபாஸ், ராணா, சத்தியராஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களே நடித்த பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் வெளியானது. தமிழகத்தில் நேற்று வெளியானது. திரைக்கு வருவதற்கு முன்பே ஹைப் ஏற்றப்பட்ட பாகுபலியை திரையில் கண்ட ரசிகர்கள் "ஆஸம் மேக்கிங் ராஜமெளலி" என்று புகழாரம் சூட்டத் தொடங்கியுள்ளனர். 

அமெரிக்கா, துபாய், சவுதி அரேபியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தியேட்டர்களும் ஹவுஸ்புல்லாகவே காட்சியளிக்கின்றன. 

இதற்கிடையே பாகுபலியின் ஒரு நாள் வசூல் 100 கோடியை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.