bahubali 2 movie suspence leeked

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் உருவாகியுள்ள 'பாகுபலி 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் வெளிவர கூடாது என கடும் பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினர் படக்குழுவினர்.

இந்த நிலையில் இவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சிகள் சமூகவலைத்தளங்கள் லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு நிமிட காட்சியில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணா , அனுஷ்கா, நாசர், ஆகியோர் தோன்றும் காட்சி வெளியாகியுள்ளதாகவும், படத்தில் உள்ள ஒரு ரகசியத்தை இந்த காட்சி வெளிப்படுத்துவது போல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மிகவும் பாதுகாப்பாக ரூ. 1000 கோடி மதிப்பு வியாபாரமுள்ள ஒரு திரைப்படத்தின் காட்சிகள் ரிலீசுக்கு முன்பே வெளியாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த காட்சிகள் பிரிவியூ திரையரங்கில் அல்லது போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெறும்போது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.