Asianet News TamilAsianet News Tamil

மொத்த இண்டஸ்ட்ரியும் மவுனம் காக்க, உதயநிதியைப் போட்டுத்தாக்கிய இயக்குநர்...

நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் இளைஞரணி பட்டம் கொடுத்தது தொடர்பாக திரையுலகில் பெரும் ஆரவாரங்களோ கூச்சல்களோ எழாத நிலையில் முரட்டுக்குத்தாக குத்தாமல் லேசாகத் தாக்கிப்பேசியிருக்கிறார் இயக்குநரும்,நடிகரும் முன்னாள் அரசியல்வாதியுமான பாக்யராஜ்.
 

bagyaraj speaks about udhayanidhi
Author
Chennai, First Published Jul 8, 2019, 10:57 AM IST

நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் இளைஞரணி பட்டம் கொடுத்தது தொடர்பாக திரையுலகில் பெரும் ஆரவாரங்களோ கூச்சல்களோ எழாத நிலையில் முரட்டுக்குத்தாக குத்தாமல் லேசாகத் தாக்கிப்பேசியிருக்கிறார் இயக்குநரும்,நடிகரும் முன்னாள் அரசியல்வாதியுமான பாக்யராஜ்.bagyaraj speaks about udhayanidhi

நடிகரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதிக்கு சமீபத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. உதயநிதி தீவிர அரசியலில் இறங்கி ஒருசில மாதங்களே ஆன நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய பதவியா? என அரசியல் விமர்சகர்கள் உதயநிதியை விமர்சனம் செய்து வருகின்றனர்.  ஆனால் திரையுலகினர் பெரிய அளவில் வாழ்த்துச்சொல்லவோ தாக்கிப்பேசவோ இல்லை.

இந்நிலையில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள 'அசுரகுரு' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாக்யராஜ், 'சினிமாவில் வாரிசுகளுக்கு அவ்வளவு எளிதில் வெற்றி வசப்படுவதில்லை. போராடிதான் வெற்றிபெற வேண்டியுள்ளது.  ஆனால் அரசியலில் அப்படியில்லை  ஒரே இரவில் முன்னுக்கு வந்து விடுகிறார்கள்' என  லைட்டாகத் தாக்கிப்பேசினார். bagyaraj speaks about udhayanidhi

இதன்மூலம் திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்கப்பட்டது குறித்து பாக்யராஜ் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.உதயநிதியும் பாக்யராஜின் வார்சு சாந்தனு அளவுக்கு கணிசமான தோல்விப்படங்கள் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்விப்படங்கள் கொடுத்த நிலையில் அரசியலில் சூப்பர் ஸ்டார் மார்க்கெட்டை உதயநிதி பிடித்த்திருக்கும் நிலையில் ஒரு தந்தையாக பாக்யராஜின் ஆதங்கம் புரிந்துகொள்ளக்கூடியதுதான்.

Follow Us:
Download App:
  • android
  • ios