bagubali kaalkeya king prabagaran

கடந்த வாரம் வெளியான 'பாகுபலி 2 'திரைப்படம் தற்போது வரை, அனைத்து திரையரங்குகளிலும் வசூலில் சிறுத்தும் குறைவில்லாமல், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'பாகுபலி 2 'படத்தின் வெற்றியால் இந்த வாரம் வெளியாவதாக இருந்த திரைப்படங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'பாகுபலி 2 ' படத்தை பார்த்து ரசிப்பவர்கள் அனைவரும், கண்டிப்பாக 'பாகுபலி 'முதல் பாகத்தை பார்த்திருப்பீர்கள். முதல் பாகத்தில் வரும் 'காலகேய' மன்னன் யார் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா... 

மிகவும் கொடூர முகத்துடன், தாரை உருக்கி மேலே ஊற்றியது போன்ற நிறத்துடன்... ஒற்றை கண்ணோடு ஆதி வாசிபோல் காட்சியளித்தவர். 

பார்க்க இப்படி காட்சி அளித்த அவர், உண்மையில் மிகவும் அழகானவர். மேலும் தெலுங்கில் 2010ஆம் ஆண்டு வெளியான 'மரியாத ராமண்ணா' படத்திற்காக தேசிய விருதை பெற்றவர். அதே போல் ' தொங்கட்டு', 'ஆகடு', 'கப்பார் சிங்,' 'சைரய்னோடு' உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து சிறந்த நடிகர் என பெயர் பெற்றவர். 

இவரது உண்மையான பெயர் பிரபாகரன், ஒரு சில தெலுங்கு படங்களில் மிகவும் மென்மையான கதாபாத்திரத்தில் நடித்த இவரை அழைத்து,பாகுபலியின்முதல் பாகத்தின் கதையை கூறி ராட்சஷன் போல் நீ மாறி வா... என கூறி அனுப்பினாராம் ராஜமௌலி.

கதையை கேட்டதும் பிடிக்கவே, தனக்கு கிடைத்த பல படங்களின் வாய்ப்புகளை ஒதுக்கி விட்டு பாகுபலி முதலாம் பாகத்தில் நடிக்க வேண்டும் என்று பல உடற்பயிற்சிகள் மேற்கொண்டு, தன்னுடைய எடை ஏற்றி, 3 மாதம் கழித்து ராஜமௌலி முன்பு போய் நின்றதும், ராஜமௌலி ஆச்சர்யப்பட்டு அவருக்கு 'காலகேய' மன்னனின் வாய்ப்பை கொடுத்தாராம்.

இதனை ஒரு பேட்டியில் கூறியுள்ள, பிரபாகரன் திரைப்படங்களை படங்களை தேர்வு செய்து நடிக்குமாறு ராஜமௌலி தன்னிடம் கூறியதாக பெருமையாக கூறியுள்ளார்.