bagubali graphic designer join director ranjith movie

‘கபாலி’யை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் 161-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. 

இந்த படம் சம்பந்தமான போட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது. இது மும்பை தாராவியில் நடப்பது போன்ற கதை. எனவே, தாராவி போலவே சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக இந்தி நடிகை ஹீமா குரோஷி நடிக்க இருப்பதாக தகவல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில்.

இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்ப கலைஞர் பெட்டாடிராப்பர் பணியாற்ற இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. 

இவர் ‘பாகுபலி-2’ படத்தில் வி.எப்.எஸ் தொழில் நுட்ப கலைஞராக பணிபுரிந்தவர். அந்த படத்தில் இடம் பெற்ற பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினியின் புதிய படத்திலும் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளது என்று கூறப்படுவதால் இந்த படத்தில் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சந்தோஷத்தில் உள்ள ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.