தமிழ்ப்பட புரமோஷன்கள் செய்து தரப்படும் என்று சில தினங்களுக்கு முன்பு கிரிக்கெட் வீர ஹர்பஜன் சிங் அறிவித்திருந்த நிலையில் அவரால் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்ட ஜீ.வி.பிரகாஷ்குமாரின் ‘பேச்சிலர்’படம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஹர்பஜன் சிங்கை அவரது ஃபாலோயர்கள் மிக மட்டமாகத் திட்டி கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த டில்லிபாபு தயாரிக்கும் புதியபடம் ’பேச்சிலர்’.ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்குகிறார். 

இந்தப்படத்தின் முதல்பார்வையை வெளியிட்டுள்ளவர்  கிரிக்கெட் விரர் ஹர்பஜன்சிங். அடிக்கடி தமிழில் ட்வீட் செய்து தமிழக ரசிகர்களிடையே தமிழ்ப்புலவர் என்று பெயர் பெற்றிருக்கும் ஹர்பஜன்சிங்,...கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்… கமிட் ஆனா உம்முனு இருக்கனும்… Bachelorனா ஜம்முனு இருக்கலாம்… ! #Bachelor First Look வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்!  என்கிற வாழ்த்துச் செய்தியுடன் படத்தின் முதல்பார்வையை நேற்று  மாலை (செப்டம்பர் 11) 7 மணிக்கு வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் ஜீ.வி.பிரகாஷ் ஒரு பெண்ணின் தொடையில் சொகுசாக ஆனால் சோகமாகப் படுத்திருக்கிறார்.

முதன்முறையாக ஹர்பஜன்சிங் ஒரு திரைப்படத்தின் முதல்பார்வையை வெளியிட்டுள்ளார் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது இந்தப்படம். ஆனால் ஹர்பஜனின் அப்பதிவுக்கு கீழே உள்ள கமெண்டுகள் அவரது மானத்தை வாங்குகின்றன...இதோ ஒன்றிரண்டு சாம்பிள்கள்...Replying to 
@harbhajan_singh @gvprakash
 and 4 others
கேவலமா இருக்கு.. இதுக்கு நீங்க விளக்கு புடிக்கமா இருந்துருக்கலாம் புலவரே..  யோவ் பஜ்ஜி, ஒரு பிட்டு படத்தோட பர்ஸ்ட் லுக்க ரிலீஸ் பண்ற அளவுக்கு இறங்கிட்டியேயா...!  பொண்டாட்டிக்கு tamil தெரியாது என்ற தைரியத்தில் இப்படியெல்லாம் பேசுறீங்க.  நடத்துங்க பாஸ் நடத்துங்க 😂

இப்ப தான் ஒரு 2 படம் ஒழுங்கா நடிச்சான் மறுபடியும் தன் வேலையை ஆரம்பிச்சுட்டான் ஜீ.வி....யோவ் லூசு அவன் எதுல தலைவச்சிருக்கான்னு சொல்லேன்....

ஏண்டா இது போல பணம் சம்பாதிக்கிறத்துக்கு ரோட்டு ஓரத்துல உட்காந்து பிச்சை எடுத்து சாப்பிட சொல்லு ....இளைய சமுதாயம் நாளும் நல்லா இருக்கும்...

இது பட ஸ்டில்?!?! தலையை தொடைக்கு இடையில வச்சுகிட்டு!? பணத்துக்காக என்ன வேணாலும் செய்வேண்ணா அப்புறம் எதுக்குடா சமூக அக்கறை கொண்ட மாதிரி வரிஞ்சுகட்டிகிட்டு பேசுற பிரகாஷ்? சமூக அக்கறையை விட சுய ஒழுக்கம் மிக முக்கியமானது. Bhaji, do not encourage such a film with a indecent poster.