நடிகர் மம்மூட்டி மற்றும் நயன்தாரா நடித்து, மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆனா படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்' இந்த படத்தை இயக்குனர் சித்திக் என்பவர் தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் ஹீரோவாக சதுரங்க வேட்டை 2,மற்றும் பெயரிடாத ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகர் அரவிந்த்சாமி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த வருடம் வெளிவந்து மாஸ் ஹிட் கொடுத்த தெறி படத்தில் அறிமுகமான பேபி நைனிகா அமலாபாலின் குழந்தையாக இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தில் நடிக உள்ள மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு.