தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் கொடுக்கும் அனைவராலும் கதாநாயகியாக நீடிக்க முடிவதில்லை. அந்த வகையில் உதிரிப்பூக்கள், மீண்டும் கோகிலா, கேளடி கண்மணி போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர் நடிகை பேபி அஞ்சு.

பின் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்த இவர், ஹார்மோன் பிரச்சனை காரணமாக உடல் எடை அதிகரித்து விட்டதால், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். மேலும் அவ்வப்போது சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதனை கேட்டு மிகவும் அதிர்ந்து போன விஜய் பட ஒளிப்பதிவாளரும், மிளகா, சதுரங்க வேட்டை, ஆகிய படங்களில் நடித்த நாயகன் நட்டி ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார்.

அதில்... இது போன்ற வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, பேபி அஞ்சு அவருடைய குடும்பத்துடன் நன்றாக உள்ளார். இது போல் அவரை பற்றி பல தகவல்கள் வருகிறது. ஆனால் அஞ்சு அவருடைய குடும்பத்துடன் வளசரவாக்கம் பகுதியில் மிகவும் சந்தோஷமாக உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் நட்ராஜ்.