baahubali stickers on facebook

இந்திய சினிமா உலகமே வியந்து பார்த்து வருகிறது பாகுபலி 2 திரைப்படத்தின் சாதனைகளை, படத்தின் முதல் அறிவிப்பு வெளியானது முதல் இன்று வரை தொடர்ந்து பல சாதனைகளை முறியடித்தும், பல புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

குறிப்பாக உலக அளவில் 1000 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமும் இது தான் அடுத்ததாக 1500 கோடி வசூலை தாண்டிய முதல் படமும் இது தான் என்ற பெருமையை தன் தோளில் சுமந்து உள்ள இப்படம் பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டாலும் இயக்குநர் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பெரிய அளவிற்கு பேச வைத்துள்ளார்.

இப்படத்தின் இடம்பெற்ற கதாப்பாத்திரங்கள் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்றதோ அதே அளவிற்கான வரவேற்பினை அவர்கள் உடுத்திய உடை பயன்படுத்திய பொருட்கள் அனைத்து கதாப்பாத்திரங்கள் வைத்துள்ள பொட்டிற்கான காரணங்களும் வெளியானது.

அதே போல, இப்படத்தில் இந்திய கலாச்சாரத்தில் பொட்டிற்கான மகத்துவமும், முக்கியத்துவமும் அதிகம் அதன் வழியில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை பல நிறுவனங்கள் தங்களில் தயாரிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்கள் பயன் படுத்தியதை வைத்து பாகுபலி உடை, பாகுபலி நகை, பாகுபலி அணிகலன்கள் பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் பாகுபலி ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பாகுபலி படத்தின் கதாபாத்திரங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்டிக்கர்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.