இந்திய சினிமாவின் மாபெரும் வெற்றிப்படமாக கருதப்படும் பாகுபலி திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாராக உள்ளது. வில்லன் பல்வாள் தேவனை கொலை செய்ததோடு பாகுபலி திரைப்படம் தான் முடிந்துவிட்டதே. ராஜமவுலியும் த கன்குளூசன் என்று  கூறி பாகுபலி சீரியசையே முடித்துவிட்டாரே? பிறகு எப்படி அடுத்த பாகம் என்று ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஆனால் தற்போது எடுக்க உள்ளது பாகுபலி படத்தின் அடுத்த பாகம் அல்ல. பாகுபலி படத்தின் முன் பாகத்தை தற்போது நெட் பிலிக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு சீரியசாக அதாவது ஒரு தொடராக எடுக்க உள்ளனர்.அதாவது தற்போது ராஜமவுலி எடுக்கப்போவது பாகுபலி திரைப்படத்தின் 3வது பாகம் அல்ல. பாகுபலி கதாபாத்திரங்கள் மற்றும் பாகுலி கதை நிகழ்ந்த மகிழ்மதி ஆகியவற்றை கொண்டு முன் பாகத்தை உருவாக்க உள்ளனர். இந்த பாகுபலியின் முன் பாகத்தை எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் இயக்குனர் தேவ கட்டா இணைந்த உருவாக்க உள்ளனர்.  அதாவது மகிழ்மதி சாம்ராஜ்யம் எப்படி உருவானது என்பதை இந்த பாகத்தில் ராஜமவுலி கூற உள்ளார். இந்த பாகத்தில் பிரபாஸ், ராணா போன்ற கேரக்டர்களுக்கு வேலை இல்லை. மாறாக சிவகாமி மற்றும் கட்டப்பா கேரக்டர்கள் மிக முக்கிய பங்காற்ற உள்ளன.  அதாவது சிவகாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதால் இந்த சீரிசுக்கு சிவகாமி என்றே பெயர் சூட்டியுள்ளனர்.   சிவகாமியாக ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைக்க பேச்சு நடைபெறுகிறது. கட்டப்பா கதாபத்திரத்திற்கும் சத்தியராஜுடன் பேசப்பட்டு வருகிறது. மிக பிரமாண்ட பொருட் செலவில் தயாராக உள்ள பாகுபலியின் ப்ரீக்வல் ஆன சிவகாமியை திரையரங்குகளில் காண முடியாது. ஒன்லி நெட்பிலிக்சில் மட்டுமே பார்க்க முடியும். அதாவது செல்போன், கணிணிகள், லேப்டாப், ஸ்மார்ட் டிவியில் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரராகி மட்டுமே பார்க்க முடியும்.