Baahubali actor prabas follow on Thala Ajith way

இந்திய சினிமா மிக பெரிய நடிகராக விளங்கி வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலமாக புகழின் உச்சத்திற்கு சென்றுவிட்டார். இந்த ஒரு படம் அவரை இந்தியா மட்டும் இல்லை உலக அளவில் புகழ் பெற்ற நடிகராக திகழ்கிறார். இவர் தற்போது சாஹா படத்தில் நடித்து வருகிறார், தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஷ்ரத்தா கபூர் கமிட்டாகி உள்ளார்.

முதலில் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார் என்ற செய்தி வெளியானது. இயக்குனரும் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிடம் உடல் எடையை குறைக்குமாறு கூறியுள்ளாராம் . பாகுபலி படத்திற்காக ஏற்றிய உடல் எடையை ஏற்கனவே குறைத்துவிட்டார் பிரபாஸ். அனுஷ்கா தான் பாவம் வெயிட்டை குறைக்க முடியாமல் இப்படத்தில் நடிக்கமுடியாளாமல் போனது.

முற்றிலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் பாகுபலி போல புதுமையான தொழில்நுட்பத்தில் மிக ஸ்டைலிஷாகவும் பிரமாண்டமாகவும் உருவாகிறது. முத்த கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு வெளிநாடுகளில் அடுத்த மாதத்தில் இருந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளது.இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்நிலையில் தற்போது பிரபாஸ் இந்த படத்தில் இடம் பெற உள்ள ரிஸ்க்கான காட்சிகளில் டூப் எல்லாம் இல்லாமல் நான் தான் நடிப்பேன் என கூறியுள்ளார். தென்னிந்தியா நடிகர்களில் அஜித்தும் டூப் போடாமல் இயக்குனருக்கு பீதியை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று, தற்போது பிரபாஸும் அஜித் பாணியில் ரிஸ்க் எடுக்கிறாராம்.