பாகுபலி-2  திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகி நல்ல வசூல் சாதனை மூலம் விநியோகிஸ்தர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. 

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை கொண்டாடும் விதமாக,  கூடிய விரைவில் மாபெரும் விழா ஒன்றையும் பாகுபலி படக்குழு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. 

இப்படி, மாபெரும் சாதனை, படைத்திருக்கும் இந்த படத்துக்கு நிகராக  வேற எந்த தமிழ் படமும் சாதனை செய்யவில்லையா..? என பலரது மனதிலும் ஒரு கேள்வி இருந்தது.

தற்போது இதற்கு விடையளிக்கும் விதமாக, ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆம் ! இதற்கு முன் பாகுபலியை போலவே ஒரு தமிழ் படம்  இந்தியாவின்  அனைத்து மாநிலங்களிலும் வெளியாகி இப்படி ஒரு பிரமாண்ட சாதனையை படைத்திருக்கிறது.

அது வேறு எந்த படமும் இல்லை, 1948-ம் ஆண்டு வெளிவந்த 'சந்திரலேகா' படம் தான் இத்தகைய வரவேற்பை  பெற்றதாம். இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் இந்தியில் இயக்குனர் எஸ். எஸ். வாசன் இயக்கி இருந்தார்.

ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த படத்தில், டி.ஆர்.ராஜகுமாரி, எம்.கே.ராதா, ரஞ்சன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் அப்போதே பல கோடி வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.