baahubali 2 pairacy issue
நடிகர் விஷால், தயாரிப்பாளர் பதவியை ஏற்றத்தில் இருந்து திருட்டு விசிடி வெயிடாமல் தடுப்பது, உள்ளூர் தொலைக்காட்சிகளில் புது படங்கள் வெளியிடுவதை தடுப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் கூட, சென்னை காவல் ஆய்வாளரை சந்தித்து மனு கொடுத்தார், இந்த மனு தொடர்பாக சென்னையில் இயங்கி வரும் பல்வேறு சிடி கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், திருச்சியில் உள்ளூர் தொலைக்காட்சியில் பாகுபலி 2 திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த படத்தை திரையிட்ட ஆப்பரேட்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பைரஸி தடுப்பு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த படத்தை திரையிட்ட ஆப்பரேட்டரை தீவிரமாக தேடி வருவதாகவும், நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவாகியுள்ளார் எனவும் பைரஸி அதிகாரி தெரிவித்துள்ளார்.
